தலைநகரம் படம் சமீபத்தில் பார்த்தேன்… ஏன் இந்த தலைப்போ தெரியவில்லை… பேசாமல் கொலைநகரம் என்று டைட்டில் வைத்திருக்கலாம்….
தமிழ் சினிமாவைப் பிடித்த சாபக்கேட்டின் படி இதுவும் தாதா கதை தான்… ரைட்டு என்ற பெயரில் ஒரு தாதா… திருந்தி வாழ நினைக்கும் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள்… முடிவு என்று ரொம்பவும் Typical ஆன Subject….
ரைட்டாக இயக்குனர் சுந்தர் சி நடித்திருக்கிறார்… முகத்தில் சுத்தமாக Expression எதுவுமே காட்டாமல் தாதாவாக நடித்திருக்கிறார்… அவருக்கு நண்பனாக வரும் மெட்டி ஒலி போஸ் நன்றாக நடித்திருக்கிறார்…. ஆக்சன் காட்சிகளில் மட்டும் பட்டையைக் கிளப்புகிறார் சுந்தர் சி…. மார்கழி மாத பஜனைக் கூட்டத்தோடு வந்து இன்னொரு தாதாவின் வயிற்றில் ஒரு கோடு போட்டு விட்டுப் போகிறாரே…. செம அதிர்ச்சி தரும் காட்சி….
பிரகாஷ் ராஜ் ஏன் இதுபோன்ற கதாபாத்திரங்களை ஒத்துக் கொள்கிறாரோ தெரியவில்லை…. அவருக்கு தீம் மியூசிக் எல்லாம் கொடுக்கும்போது ஏதோ கலக்கப் போகிறார் என்று நினைத்து ஏமாற்றம் தான் அடைகிறோம்…
வடிவேலு வழக்கம்போல வெடிவேலு…. நாய்சேகராக இவரும் ஒரு குட்டித் தாதா (தாதா படங்களில் காமெடியனும் தாதா தானா?) இருந்தாலும் வின்னர், கிரி, லண்டன் என்று சுந்தர் சி இயக்கிய படங்களில் எல்லாம் கலக்கிய அளவுக்கு இந்தப் படத்தில் இல்லை…. பிகரை உஷார் செய்வதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு வரும் வடிவேலு மயில்சாமியிடம் கேட்கிறார்…. நான் எப்படி இருக்கென்?… அதற்கு மயில்சாமியின் பதில் “அண்ணே… சும்மா கும்முன்னு பிராத்தல் மாதிரி இருக்கீங்கண்ணே”
படத்தில் பாய் ஆக வரும் கிழவர் சூப்பராக நடித்திருக்கிறார்… அவரது குரல்(!) அவருக்கு பிளஸ் பாயிண்ட்…. டெல்லி கணேசும் வழக்கம்போல அவரது கேரக்டரை (அரசியல்வாதி) மெருகேற்றி இருக்கிறார்…..
இசை சுமார் தான்… ஏதோ நினைக்கிறேன் பாட்டு மட்டும் ஓகே…. அந்தப் பாடலுக்கு இயக்குனர் அமைத்திருக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்…. இருந்தாலும் பாடலில் ஹீரோயின் சுறுசுறுப்பாக இருக்க ஹீரோவோ தேமேவென்று அசமஞ்சமாக இருப்பது கடுப்பு…..
கத்தி எடுத்தவன் நல்லவனாக இருந்தாலும் கத்தியால் தான் சாவான் என்று மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்…. 13 ரீலில் வெட்டு, குத்து என்று வன்முறையை நியாயப்படுத்தி விட்டு 14வது ரீலில் மெசேஜ் சொல்லுவது எவ்வளவு அபத்தம் என்று நம் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு என்றுதான் புரிந்து தொலைக்குமோ தெரியவில்லை…..
ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று தொழில்நுட்ப ரீதியிலாக படம் சுமார் தான் என்றாலும் தமிழ் சினிமாவைப் பீடித்திருக்கும் தாதா Fever, தலைநகரத்தை கரையேற்றுகிறது…..